தீவிர இடதுசாரிக்கட்சியான சிரிசா 149 இடங்களை வென்று 300 உறுப்பினர்கள் உள்ள கிரீஸ் பாராளுமன்றத்தில் 2 உறுப்பினர்களே தனிப்பெருமான்மைக்கு குறைவாக உள்ளது.
சிரிசா கட்சியின் தலைவரானா வெறும் 40 வயதேயான Alexis Tsipras கடந்த 150 வருடங்களில் கிரிஸில் பதவியேற்க போகும் மிக இளவயது பிரதமர் என்ற பெருமையை பெறப்போகிறார்.
தேர்தல் வெற்றியின் பின் கருத்து தெரிவித்த Alexis Tsipras ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் என்பவற்றுடன் கிரீஸின் 269 பில்லியன் பிணையெடுப்பு விதிமுறைகள்பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இருந்தபோதிலும் தீவிர இடதுசாரிக்கட்சியான சிரிசா பெற்ற வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்துடனும், சர்வதேச கடனாளர்களுடன் மோதல் போக்கை கொண்டுவரும் என எதிர்பார்க்கபடுகிறது. சிரிசாவே ஐரோப்பாவில் அதிகாரத்துக்கு வரும் முதலாவது சிக்கன எதிர்ப்பு கட்சியாகும்.
இதேவேளை முன்னர் அதிகாரத்தில் இருந்த Antonis Samaras இன் புதிய ஜனநாயக்கட்சி 76 ஆசனங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியை ஏற்றுக்கொண்டு பேசிய கட்சி தலைவர், புதிய அரசாங்கம் கிரீசின் ஐரோப்பிய ஒன்றிய உரிமையையும், யூரோ நாணய உரிமையையும் ஆபத்துக்குள்ளாக்காது என நம்புவதாக தெரிவித்தார்.
இதேவேளை பெரும்பாலான கிரீஸ் மக்கள் கடும் சிக்கன கொள்கைகள் வளர்ச்சியடைந்த வடக்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஜேர்மனி தம்மீது திணிப்பதாகவே நம்புகின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.