கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாத மார்கழியின் முதல் நாளிலிருந்து ஆரம்பித்து 31 நாட்கள் தொடச்சியாக மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில், வாசலில் சாணத்தால் பிள்ளையார் செய்து, மஞ்சள், குங்கும், பூ வைத்து விளக்கேற்றி வைத்தால் நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இலங்கையின் தமிழர் பகுதிகளில் இது இன்றும் தொடர்ந்து வருகின்றது.
கீழே உள்ள படங்களில் மார்கழி மாத இறுதி நாளான இன்று பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளதைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.