சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒரு பதிவு இது. வாராந்தம் இந்த பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது
அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.