யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட #ஞானம் சஞ்சிகை ஸ்தாபகர், சாகித்யரத்னா, வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவர்கள் தமது 84வது வயதில் இயற்கை எய்தினார்.
ஆயுள்வேத வைத்தியரான தி.ஞானசேகரன் மலையக மக்களால் வைத்தியக்கடவுள் என போற்றப்பட்டவர்.
யாழ்ப்பாண மண்ணின் பண்பாடுகளையும், மக்களின் வாழ்க்கை முறையினையும் தான் எழுதிய நாவல் மூலமாக கொண்டு வந்தவர்.
"குருதிமலை" எனும் நாவல், மலையக மக்களின் வாழ்வியலையும், அவர்கள் படும் துயரங்களையும் எடுத்து சொல்லும் ஒரு முக்கிய நாவலாகும்.
எமது போராட்ட தொடக்கத்தையும், தமிழ் இளைஞர் ஏன் ஆயுதம் ஏந்தி போர் செய்ய வேண்டி வந்தது என்பதையும், "அல்சேசன் நாயும் பூனைக்குட்டியும்" என்ற சிறுகதை மூலம் சொல்லி சென்றவர்.
ஈழத்து போர் இலக்கியங்களை ஆவணமாக்கிய பெருமை தி.ஞானசேகரன் அவரையே சென்று சேரும்.
பயன்தரும் "பயணக்கட்டுரைகள்" பலவற்றை தந்தவர் ஆவார். (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.