ரெட் கைட்ஸ்(Red Kites) அணி Yarl Geek Challenge கிராண்ட் பினாலே(Grand Finale) வெற்றியாளராகியது! (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2014 (சனிக்கிழமை)
இன்று கொழும்பு மருதானையில் அமைந்துள்ள Dialog Future World இல் இடம்பெற்ற Yarl Geek Challenge மாபெரும் இறுதிப் போட்டியில் (Grand Finale) இல் வெற்றியாளராக மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து பங்குபற்றிய ரெட் கைட்ஸ் (Red Kites) அணி வெற்றியாளராக தெரிவாகியது.
வெற்றி பெற்ற இவ்வணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும், புளு ஓசன் வெஞ்செர்ஸ் (Blue Ocean Ventures) சிறு/ மத்தியதர கம்பனி ஆரம்பிப்பதற்கு வழங்கும் முதலீட்டு தொகையான 1 மில்லியன் ரூபாயும் கிடைத்தது. இவ்வணி பஸ் முன்பதிவு செய்வதற்கான மொபைல் அன்றோய்ட் அப்ளிகேஷன், இணையத்தில் இயங்கக்கூடியதான தயாரிப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை SLIIT மாலபேயில் இருந்து பங்குபற்றிய ஸ்பேசி அணி (Team Spacey) கருத்தரங்குகள், கூட்டங்கள், அலுவலகங்கள் இயங்குவதற்கான இடங்களை தேடி முன்பதிவு செய்யக்கூடிய இணையத்தளத்தினை வடிவமைத்து இரண்டாமிடத்தை தட்டி சென்றனர். இவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு கிடைக்கபெற்றிருந்தது. மேலும் லங்கன் ஏஞ்சல் நெட்வொர்க்(Lankan Angel Network) இனால் முதலீடு அளிக்கப்படுவதற்க்கு வாய்ப்பு பெறுகின்றார்கள்.
அடுத்து மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து பங்குபற்றிய ட்ரெக்லேர்ஸ் அணி (Team Tracklers) Dialog Ideamart API இல் இயங்கும் கண்காணிப்பு அமைப்பை தயாரித்து மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது. இவர்கள் Dialog Ideamart API ஐ பயன்படுத்தியமையால் டயலொக் வழங்கும் சிறப்பு பரிசையும் பெற்றுக்கொண்டனர். மேலும் இவர்களும் லங்கன் ஏஞ்சல் நெட்வொர்க் (Lankan Angel Network) இனால் முதலீடு அளிக்கப்படுவதற்க்கான வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
இந்த மூன்று அணிகளை விடுத்து, துனா லாப்ஸ் (Tuna Labs), ஸ்ரைக்கேர்ஸ் (Strikers), அணிகளும் லங்கன் ஏஞ்சல் நெட்வொர்க் (Lankan Angel Network) இனால் முதலீடு அளிக்கப்படுவதற்க்கான வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
இன்று நடைபெற்ற இறுதிபோட்டியில் பங்குபற்றிய 9 அணிகளின் திட்டங்களும் எமது இணையதளமான Valvettithurai.org எதிர்வரும் நாட்களில் நாள் வீதம் ஒரு அணியின் திட்டம் என்ற வகையில் பிரசுரமாகும்.
வாசகர்களாகிய நீங்களும் இத்திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்களாக அவர்களை தொடர்பு கொண்டு அவர்களது திட்டங்கள் சந்தையில் கிடைக்க வழிவகை செய்யலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Iswaran (UK)
Posted Date: November 23, 2014 at 07:40
இம்முறை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குழுக்கள் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை என்ற குறையை விடுத்து அவர்கள் போட்டிகளில் பங்குபற்றி தங்கள் ஆக்கபூர்வமான முயற்சியை எடுத்துக் காட்டியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதே முயற்சியுடன் மனம் தளராது தொடர்ந்து முயற்சித்தால் வருகிற வருடம் வெற்றி நிச்சயம். வல்வெட்டித்துறை.ஓஆர்ஐP இணையம் இத்தகைய முயற்சிகளைப்பற்றி வெளியிட்டு அவர்களை ஊக்குவிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஊங்கள் இணையம் மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் என்பதில ஐயமில்லை.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.