யாழப்பாணம் பொலிகண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராமிய கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல், சுருள் வாள், மடு, தீப்பந்த விளையாட்டுக்கள் மற்றும் கூத்துக் கலை போன்ற கிராமியக்கலைகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த திரு.தில்லையம்பலம் தவராசா (சிவலிங்கம்) அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.
கடந்த 2014ஆம் ஆண்டு கிராமியக்கலை சார்பாக கலாபூஷணம்
விருது வழங்கும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படம்
சிவலிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தளபதி சூசை அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் கலைப்பணிகளை பாராட்டி சிலம்புச்சக்கரவர்த்தி, கலைப்பிரதி, சிலம்பாசான் போன்ற பட்டங்களும், கிராமியக்கலை சார்பாக 2014ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: November 30, 2018 at 14:33
சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல் சருள்வாள் வீசுதல் போன்ற தமிழினத்தின் பாரம்பரிய கலைகளின் பெட்டகமாக திகழ்ந்த கலாபூசணம் சிவலிங்கம் அண்ணா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் துயருறுகின்றேன்.
.
தமிழினத்தின் பாரம்பரிய கலைகளாகிய சிலம்பாட்டம், உடுக்கு அடித்தல் சருள்வாள் வீசுதல் போன்ற கலைகள் அருகிக்கொண்டுவரும் தற்போதைய காலகட்டத்தில் அன்ணாரின் மறைவு தமிழினத்திற்கு ஒரு மிகுந்த பேரிழப்பாகும்.
.
கலாபூசணம் சிவலிங்கம் அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எமது வல்வை நெடியகாட்டுப் பிள்ளையாரப்பனை பிராத்திக்கின்றேன்.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: November 29, 2018 at 20:58
ஆழ்ந்த இரங்கலும் இறுதி அஞ்சலியும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.