இந்துகளின் நிகழ்வுகளில் ஒன்றான திருக்கார்த்திகை விளக்கீடாகிய இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, ஆலய முன்றலில் செயற்கை விருட்சம் அமைத்து, சொக்கப்பனையான அவ்வமைப்பை பக்தர்கள் சூழ நின்று எரியூட்டப்படும் நிகழ்வு இடம்பெற்றது. சொர்க்கப்பனை எரிக்கும் நிகழ்வினை தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்திருந்தார் . நிகழ்வுகள் சுமார் பிற்பகல் 0630 மணியளவில் நிறைவேறியிருந்தன.
ஆலயத்தில் 'சொக்கப்பனை' எரிக்கும், மற்றும் சுவாமி வீதி வலம் வருவதையும் படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.