மார்கழி மாதத்தில் இடம்பெறும் இந்துக்களின் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை இன்று 24 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் இத்திருவெம்பாவை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மார்கழித் திருவெம்பாவை
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை வேண்டி திருவெம்பாவை விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
திருவெம்பாவை விரதத்தை இந்துக்கள், மார்கழி மாதத்தில் நிகழும் திருவாதிரை தினத்துக்கு ஒன்பது நாட்கள் முன்னர் விரதத்தை ஆரம்பித்து, பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வது வழமை. அதாவது மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் தினங்கள் திருவெம்பாவை விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று சிவன் கோயில்களில் நடராஜர் திருக்கூத்து இடம்பெறுவது வழமையானவொன்றாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.