தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 0630 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு மத்தியில் தீர்த்த திருவிழா ஆரம்பமானது.
தீர்த்த திருவிழா உள் வீதியை மையமாக கொண்டு நடைபெறுவது வழமையாகையால் ஆலயத்தின் உள்வீதி சனநெரிசல் மிகுந்து காணப்பட்டது.
தீர்த்த திருவிழா காலை 1030 மணியளவில் நிறைவெய்தியது. இதனைத்தொடர்ந்து இவ்வாலயத்தில் மட்டும் நிகழும் மெளனத் திருவிழா இன்று மாலையும் நாளை பூக்காரர் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
இன்று இறுதித் திருவிழா ஆகையால் இன்றும் ஆலய வளாகம் மற்றும் வீதிகள் பக்தர்கள், நேர்த்திகள் மற்றும் பல்வேறு வியாபாரங்கள் என்பவற்றால் நிறைந்துள்ளதைக் காணக் கூடியதாகவுள்ளது
குறித்த தீர்த்தத் திருவிழாவின் நிகழ்வுகள் எமது இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்புச்செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தத் திருவிழாவின் முழுப் படத் தொகுப்பினையும் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.