வீதிகள் நிறைந்த வெள்ளம்போல் பக்தர்கள் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தேர்த் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2015 (வெள்ளிக்கிழமை)
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் திருவிழாவும் அதிக பக்தர்கள் பங்கு கொள்ளும் முக்கிய திருவிழாவுமான தேர்த் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு மத்தியில் தேர்களின் உலா சுமார் 10 மணியளவில் ஆரம்பித்தது. வெளிவீதி உலாவினைத் தொடர்ந்து அர்ச்சனைகள், பச்சை சாத்துதல் என்பன இடம்பெற்று திருவிழா சுமார் 2 மணியளவில் நிறைவுற்றது.
தேர்த் திருவிழாவைத் தரிசிக்க வந்திருந்த பக்தர்களால் ஆலய வீதிகள், மடங்கள் ஆலயத்திற்குக் செல்லும் வீதிகள் என்பன நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. மேலும் காவடி, தூக்குக் காவடி, கரும்புக் காவடி பாற்ச்சொம்பு ஆகிய
நேர்த்திகளாலும், மற்றும் பஜனைகள் வீதிகள் தோறும் வியாபித்திருந்தன.
திருவிழாக்களுக்கேயுரிய பெற்றோரை தவற விட்ட குழந்தைகள், சிறு திருட்டுக்கள் போன்றனவும் இடம்பெறத் தவறவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.