செல்வச்சந்நிதி தீர்த்தத் திருவிழா நிறைவு, இன்றும் வெள்ளம்போல் பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/08/2015 (சனிக்கிழமை)
தொண்டைமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜைகளைத் தொடர்ந்து அடியார்களின் பலத்த அரோகரா கரகோசத்திற்கு மத்தியில் தீர்த்த திருவிழா சுமார் 10 மணியளவில் ஆரம்பமானது.
தீர்த்தத்திருவிழா கோயிலின் உள் வீதியை மையமாக கொண்டு, கோயிலின் கேணியில் நடைபெறுவது வழமையாகையால் ஆலயத்தின் உள்வீதி சனநெரிசலால் மிகுந்து காணப்பட்டது.
தீர்த்த திருவிழா முற்பகல் 1130 மணியளவில் நிறைவெய்தியது.
செல்வச் செந்நிதி கோயிலில் மட்டும் நிகழும் மெளனத் திருவிழா இன்று மாலையும் நாளை பூக்காரர் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
இன்று இறுதித் திருவிழா ஆகையால் இன்றும் ஆலய வளாகம் மற்றும் வீதிகள் பக்தர்கள், நேர்த்திகள் மற்றும் பல்வேறு வியாபாரங்கள் என்பவற்றால் நிறைந்துள்ளதைக் காணக் கூடியதாகவிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.