ஸ்ரீ செல்வசந்நிதி ஆலய அன்னதானக் கந்தனின் 3ஆம் நாள் திருவிழாவின் படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 28/08/2014 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தின் 3ஆம் நாள் திருவிழாவிற்காக பூசைகள் நேற்று இரவு 08.30 மணியளவில் ஆரம்பமாகி, பூசைகளைத் தொடர்ந்து முருகப் பெருமான் இரட்டைக் குதிரை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளினார்.
செல்வசந்நிதி முருகனின் சிறப்பு
'அன்னதானக் கந்தன்', 'ஆற்றங்கரை வேலவன்' என்றமைந்த இரு திருநாமங்களும் செல்வசந்நிதி முருகனைக் குறிப்பனவாக இவனின் சிறப்புக்களைப் பேசுவனவாகவே அமைந்துள்ளன. இவ்விரு திருநாமங்களும் சந்நிதி முருகனுக்காய் அமைந்த சிறப்புத் திருநாமங்களாகும்.
தம்மை ஆண்டிவந்தோருக்கு அமுதளித்து, அன்னம் கொடுத்து, அரும்பசி போக்கி - பெரும் பசி நீக்கி -ஆறுதல் அளித்திடும் தன்மையில் சந்நிதி முருகன் அன்னதானக் கந்தனாகின்றான்.
தொண்டைமான் ஆற்றங்கரைதனிலே இனிதமர்ந்து, தம்மை நம்பி வந்திடும் அடியார்களின் வரும் பிணியகற்றி - பெரும் பிணி போக்கி அவர்களின் அல்லல்களைக் களைத்து, அருளாட்சி புரிந்திடும் தன்மையில் சந்நிதி முருகன் ஆற்றங்கரை வேலனாகின்றான்.
(இச் சிறு குறிப்பானது திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் எழுதிய "ஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்" எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.