தொண்டைமானாறு - மருதங்கேணி நீரேரி 600 மில்லியன் ரூபாவில் மீள்புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2016 (வெள்ளிக்கிழமை)
யாழ்.தொண்டைமானாறு குடாக்கடல் நீரேரி நன்னீராக்க வேலைத்திட்டத்தின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு மேற்குப் பக்கத்திலுள்ள தடுப்பு அணை கதவுகள் மீள்புனரமைப்புச் செய்யப்படுவதோடு நீரேரியில் மருதங்கேணி வரையுள்ள பகுதிக்கு இரண்டு பக்கமும் மண் அணை கட்டப்படவுள்ளது.
தொண்டைமானாறு குடாக்கடல் நீரேரி நன்னீராக்கும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் களப்பு நீர் உவர்த்தன்மை குறைவடைந்து வருவதால் களப்புக்கு கரையோரமாகவுள்ள கிணறுகளின் நீர் குடிநீராகப் பயன்படுத்துவதற்கும் பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதற்கும் ஏற்றதாக மாற்றமடைந்து வருகின்றது. அத்துடன் களப்பு நீரை கால் நடைகளும் அருந்திவருகின்றன. இந்த மாற்றம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தில் தொண்டைமானாறு தடுப்பணை கதவுகள் திருத்தி அமைக்கப்படுவதுடன் கதவுகளுக்கு இரண்டு பக்கமும் நீர் ஊடு வடிந்து கலப்பு ஏற்படாத வகையில் நிலத்தின் கீழ்ப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. அத்துடன் குடாக்கடல் நீரேரியில் மருதங்கேணி நோக்கிச் செல்லும் நீரேந்து பகுதியின் இரண்டு பக்கமும் மண் அணை மற்றும் நீர் தடுப்பு தடைகள் நிறுவப்படவுள்ளன.
இதன் மூலம் மழை நீரைகுறிப்பிட்ட அளவு இந்தப் பகுதியில் தேக்கி வைப்பதற்கும் மிதமிஞ்சிய மழை வெள்ளத்தை சமுத்திரத்திற்கு கடத்துவதற்கும் அதேநேரம் சமுத்திர உப்பு நீர் எந்த வகையிலும் குடாக்கடல் நீரேரி பிரதேசத்தின் உள்ளே புகமுடியாத அளவுக்கு அமைக்கப்படவுள்ளது.
தொண்டைமானாறு குடாக்கடல் நீரேரி
மேற்குறித்த செய்தி யாழ் தினசரிப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.