தொண்டைமானாறு கடல்நீரேரியை அண்மித்த பகுதியில் தடைசெய்யப்பட்ட வலையை பாவித்து மீன்பிடி
பிரசுரிக்கபட்ட திகதி: 28/01/2015 (புதன்கிழமை)
தொண்டைமானாறு கடல்நீரேரியை அண்மித்த வல்லை கடற்பகுதியில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதால் தொண்டைமானாறு மற்றும் அக்கரையைச் சேர்ந்த இறால் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அச்சுவேலி, ஆவரங்கால், தம்பாளை போன்ற பகுதிகளில் இருந்துவரும் சிறுதொழில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களே இந்த தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இதனால் இறால் பிடிப்பதற்குரிய காலநிலை உள்ளபோதும் தடைசெய்யப்பட்ட மீன்பிடியால் இறால் பெருக்கம் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த செய்திக்குறிப்பு வருமாறு;
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.