செல்வச்சந்நிதி பூங்காவனத் திருவிழா இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/08/2017 (புதன்கிழமை)
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் முதலாவது பிரதான திருவிழாவான பூங்காவனத் திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. பூங்காவனத் திருவிழாவையொட்டி பூங்காவான மண்டபம் மற்றும் நீர்த் தொட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான மஞ்சள் பூக்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் வீதியுலா வந்து, சுமார் 12 மணியளவில் பூங்காவனத்தில் வந்து அமர்ந்தார்.
பூங்காவனத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் வீதியுலாவுடன் நண்பகல் நிறைவெய்தியது.
பூங்காவனத்தையொட்டி துலாக்காவடிகள், காவடிகள் மற்றும் பாற்சொம்புகள் என அடியார்கள் நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.