வட மேற்கு லாவோஸ் (Laos) இல் உள்ள ஒரு தங்குமிட வளாகத்தில் புலி இறைச்சியும் கரடி “பாவ்” வும் தாராளமாகவே கிடைப்பதாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சீனர்களை எதிர்பார்த்து அமைந்துள்ள இந்த இடங்கள் ஒரு “சட்டம் அற்ற விளையாட்டு மைதானம்” போல் உள்ளதாகவும் இங்கு சட்டவிரோதமான முறையில் மிகவும் அரிதான காட்டு விலங்குகள் இறைச்சிக்காக விற்கப்படுவதாயும் தெரிவிக்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள் தாராளமாகவே இந்த “பிரத்தியேக தயாரிப்புக்களை” மியான்மார், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி அமைந்துள்ள “தங்க முக்கோண பிரத்தியேக வர்த்தக வலயம்” (Golden Triangle Special Economic Zone) எனப்படும் பிரதேசத்தில் வாங்க முடியும் என சுற்றுப்புற ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் சீனர்கள் இந்த அரிதான மிருகங்களின் இறைச்சிகளில் தாம்பத்தியத்தை அதிகாரிக்கும் தன்மை மற்றும் மருத்துவ குணங்கள் உண்டு என்று நம்புகின்றார்கள்.
சுற்றுப்புற ஆய்வு அமைப்பு ஆனது உடனடியாக இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கக் கோரி லாவோஸை கேட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: April 01, 2015 at 01:31
வணக்கம் !எம்மை பாதுகாக்கும் இயற்க்கையை மனிதர்களது அளவுக்கு மிஞ்சிய ஆடம்பர தேவைகளுக்காக அழிதுக்கொண்டிருக்கின்றோம் .எந்த மிருகங்களும் காட்டை தாண்டிவந்து மனிதர்களை அழிப்பது கிடையாது .ஆறறிவு உள்ள மனிதர்கள்தான் தமது சுயநல தேவைகளுக்காக இயற்க்கைவாழ் உயிர்களையும் ,இயற்கையையும் அழிதுக்கொண்டிருக்கின்றோம் .இதனால் இந்த உலகத்தில் சுத்தமான சுகாதாரமான தண்ணீரும் ,காற்றும் இல்லாமல் இந்தஉலகம் மனிதர்களால் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பது மிகவும் மன வேதனையான துயரமானது .நாம் அனைவரும் இயற்க்கை எனும் நீதி மன்றத்தில் குற்றவாளிகள் .இயற்க்கையை பாதுகாப்போம் !இயற்க்கையை வாழவைப்போம் !!இயற்க்கையை வாழவிடுவோம் !!!இயற்க்கை எமது நண்பன் ,இயற்க்கை எமது வாழ்க்கை ...எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்கு சுத்தமான சுகாதாரமான. சாதி ,மதமற்ற .நோய்கழற்ற அமைதியான ,ஆரோக்கியமான உலகத்தை விட்டுசெல்வோம் .நன்றி .பணிவுடன் ///சூரன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.