த.தே.ம.மு இன் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று வல்வையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2015 (திங்கட்கிழமை)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (Tamil National People's Front - TNPF) தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டமும் நேற்று வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ரேவடி கடற்கரை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் இதுவரை யுத்தத்தில் இறந்தவர்களுக்கான ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமானது.
இந்த முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் சார்பில் யாழ்பாணம் தேர்தல் மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட சகல வேட்பாளர்களுடன் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அனைத்து வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்ததுடன் அனைவரினதும் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.
பிரச்சாரக் கூட்டத்தினை முன்னிட்டு ரேவடி மைதானம் மற்றும் மைதானத்திற்கான பிரதான வீதி மின்விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கூட்டம் இரவு சுமார் 1 0 3 0 மணி வரை நீடித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.