இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26 ஆம் தேதி பவுர்ணமி நாளில் நிகழவுள்ளது.
பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி சந்திரன் மேல் விழுவது தடைப்படும். அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக (பவுர்ணமி) இருப்பின், 'சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலாவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் இளம் சிவப்பு நிறத்தில் இருந்து ரத்தச்சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.
ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் சமுத்திரம், இந்திய சமுத்திரம், அண்டார்டிகா ஆகிய பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும்.
எதிர்வரும் 26 ஆம் திகதி பிரபாகல் 2:17 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 7:19 மணிக்கு முடிவடையும் இந்த இந்நிகழ்வு, மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.