சாரண ஆசிரியர் செல்வவிநாயகம் அவர்களுக்கு இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2019 (வெள்ளிக்கிழமை)
எங்கள் குழுச் சாரண ஆசிரியர் திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுக்கு இதயம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி…!
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் முனனாள் குழுச் சாரண ஆசிரியராகவும்,புகழ் பூத்த பிரபல விலங்கியல் ஆசிரியராகவும் சிறப்புடன் சேவையாற்றிப் பின்னர் யுத்தகாலத்தில் நெருக்கடி மிகுந்த காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின். அதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசான் திரு.கோணநாயகம் செல்வவிநாயகம் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னாரது புகழுடல் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள அவரது "சாந்தம்" இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை (16.02.2019) அன்று முற்பகல் 9.30 மணிக்கு மயிலியதனை இந்துமயானத்திற்குத் தகனக் கிரிகைக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அவரது மாணவர்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.
எங்கள் விலங்கியல் பாட ஆசிரியராகவும்,குழுச் சாரண ஆசிரியராகவும், சாரண பயிற்றுநராகவும் ஆளுமை படைத்த கல்வி நிர்வாக சேவை அதிகாரி யாகவும் இருந்து எங்களை சிறந்த நிர்வாகி யாகவும், பல்துறை ஆற்றல்கள் மிக்கவர்களாகவும் வாழ வழிகாட்டியதுடன் , ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரன் ரவீந்திரன் அவர்களை இந்த மண்ணுக்கு அளித்து> இன்று மீளாத்துயில் கொண்டிருக்கும் எங்கள் ஆசான் அமரர் கோ.செல்வவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக் கின்றோம்.....!
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,அவர் நேசித்த கல்விச் சமுகத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின் றோம்…
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: February 15, 2019 at 21:13
செல்வவிநாயகம் அதிபர் அவர்களுக்கு அகவணக்கமும் இறுதி அஞ்சலியும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
Captain.V.Sivajee (Australia)
Posted Date: February 15, 2019 at 15:09
Mr.K.Selvanayagam Is a great man of principle, self decipline, high quality of leadership, functuality, strong willpower, excelant organiser, and very good guide.I am one of the student , those who are participateing in all school activities except studies in our school J/Udduppidy american college and J/chithambara college.On the 1966,January, I joind as younior scout at J/Udduppidy american college, and met him as my scout master, and knew nothing abot him. He was having a kind of charm and high class manners of respecting every one as friend or family member. Then this relationships ship continued in J/Chithambara college too till 1976. I had almost seven years relationship with him. During this period, one thing I noticed, that who ever spoke to him once, that person would have been eager to maintain respect and continew relationship with him. After I started my sea carrier, very seldom met him. After the political unrest in 1987, I left Srilanka and never had any contact with him. Once in a while, if opportunity arises, I used to inquire my native friends about his health and time passing.
Now I am retired man, and very offten think about him because many precious stuffs , he influanced in me. Specially, when my colleagues and accuantances praising me for any good stuff found in me.
I am certainly sure, if there is any good qualityes in me that is he guided me. Last thirty years I couldn't see him. Also, few days back I spoke to my chield wood friend Mr.N.Jeyaveerasigamany , who is his son in low, and asked about him and said will be there very soon and meet him.
Now I am desepointed.....I pray god for his sole rest in peace. I LOST A GOOD GENTLEMAN, GURU, AND GOOD FRIEND...
S. Rajendra (UK)
Posted Date: February 15, 2019 at 13:45
கண்ணீருடன் .....
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை வாழ்வியலாக வாழ்ந்து வரைந்து மறைந்த மாண்பு மிக மாமனிதரை எண்ணி எண்ணி கண்ணீருடன் ...
அவர் தம் குடும்பத்தினருக்கு எமது அனுதாங்களை தெரிவிக்கிறோம்.
இராஜேந்திரா மாஸ்டர்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.