ATM மோசடியில் ஈடுபட்ட 2 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2015 (வெள்ளிக்கிழமை)
இந்திய போலீசார் ATM மோசடியில் ஈடுபட்ட 2 இலங்கை தமிழர்கள் உடைபட்ட 8 பேரை இந்தியாவின் தமிழகத்தில் கைது செய்துள்ளனர் என ஹிந்து நாழிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சியில் வைத்து இந்த இலங்கையர் உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து போலி ஏ.ரி.எம் அட்டைகளுடன், கணணி, கார்கள் மற்றும் ATM அட்டைகளை தயாரிக்கும் இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 28 வயதான பிரசாந் மற்றும் 26 வயதான சுமன் ஆகிய இருவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.