எரிந்துகொண்டிருந்த கப்பலில் இருந்தவர்களை காப்பாற்றிய மாலுமிகள். USCG & AMVER இனால் கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
கடந்த 20 ஆம் திகதி பெர்முடா (Bermuda) விற்கு 900 கடல் மைல்கல் தூரத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 19 மாலுமிகளக் பாதுகாப்பாகக் வர்த்தகக் கப்பலான K Coral லின் மாலுமிகள் காப்பாற்றியுள்ளார்கள்.
இதனால் கப்டன் உட்பட்ட மாலுமிகள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படை (United States Coast Guard - USCG) மற்றும் மற்றும் அமெரிக்காவின் கப்பல்களை மீட்பது தொடர்பான உதவிகளை வழங்கும் அமைப்பான Automated Mutual Assistance Vessel Rescue System (AMVER) ஆகியவற்றினால் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளார்கள்.
கப்டன் உட்பட்ட மாலுமிகளுக்கான சான்றிதழ்களை USCG மற்றும் AMVER அதிகாரிகள், நேற்றைய தினம் New Haven துறைமுகத்தில் குறித்த கப்பலுக்குச் சென்று நேரடியாக வழங்கியிருந்தார்கள்.
சர்வதேச கடற்பரப்பில் உண்டாகும் அனர்த்தங்களின் போதான மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் சக கப்பல்களிகளின் உதவியே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.