உதயசூரியன் 57வது ஆண்டுவிழா - இன்று இடம்பெற்ற கடற்கரை உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 21/08/2019 (புதன்கிழமை)
வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் 57 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றுவரும் விளையாட்டு போட்டிகளின் வரிசையில் இன்று இரவு ஆண்களுக்கான கடற்கரை உதைபந்து போட்டிகள் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெற்றது.
முதலாவது போட்டியில் சைனின்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டத்தில் 4:2 என்ற கோல் கணக்கில் சைனின்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் ரெயின்போ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டம் 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மூன்றாவது போட்டியில் ரேவடி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
மழை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளது. போட்டிகள் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.