உயிர்வரை இனித்தாய் கனடாவில் திரையிடைப்பட்டது (முழு படத் தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2014 (புதன்கிழமை)
வல்வை நலன்புரிச் சங்கம் கனடா ரொரன்ரோவின் ஆதரவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யோர்க் சினிமா திரையரங்கில் கடந்த சனிக்கிழமை 18.10.2014 மாலை 6.30 மணிக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது.
திரைப்பட வெளியீட்டிற்காக டென்மார்க்கில் இருந்து திரைப்பட நாயகன் வஸந்த், நாயகி நர்வினி, இயக்குநர் கே.எஸ்.துரை, தயாரிப்பு ஆதரவு வழங்கிய ரியூப் தமிழ் உரிமையாளார் ரவிசுகதேவன், விற்பனைமுகாமையாளர், டீ.கேரவல்ஸ் அதிபர் வல்வை சச்சி சுப்பிரமணியம், புகைப்படப்பிடிப்பாளர் மிதிலா செல்லத்துரை ஆகியோர் கனடா வந்திருந்தனர்.
இவர்களுக்கு தங்கியிருந்த கோட்டலில் இருந்து திரையரங்குவரை லிமோஸ் வாகன அழைப்பு, செங்கம்பள வரவேற்பு போன்றவற்றை வல்வை நலன்புரிச் சங்கம் (ரொரன்ரோ) வழங்கியது.
இத்தருணம் திரைப்படக் குழுவினர் திரு. எஸ்.ஜெயபாலசிங்கத்திற்கு வல்வையின் திரைப்பட முன்னோடி என்ற விருது வழங்கி கௌரவித்தனர்
திரைப்படக் குழுவினருக்கு சிறப்புக் கேடயத்தை ஏ கண் ஏ றிங் திரைப்பட தயாரிப்பாளர் திரு. முரளிமுகுந்தன் வழங்கினார்.
விழா குறித்து திரைப்படக் குழுவினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யோர்க் சினிமா உரிமையாளர்களில் ஒருவரான வல்வை பிரசன்னாக லிங்கராஜன் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உதவினார். அவருடைய பெற்றோர் கலிங்கராஜன் தம்பதியனருக் திரைப்பட நாயகன் வஸந்த் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தார்.
திரைப்படங்களை வர்த்தக ரீதியில் தயாரிக்கும் முயற்சியில் இது முக்கிய வெற்றி என்று பிரபல கலைஞரும் கனடா ரி.வி.ஐ தொலைக்காட்சி இயக்குநருமான திரு. விக்கினேஸ்வரன் மகிழ்வு வெளியிட்டார்
வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இரவு பகலாக பாடுபட்டு வெற்றிகரமாக காரியங்களை நிறைவேற்றியுள்ளார்கள் என்று திரைப்பட இயக்குநர் பாராட்டியதோடு கனடாவாழ் வல்வைப் பெருமக்களின் பேராதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
கனடாவில் தங்கி நின்ற பத்துத் தினங்களிலும் வல்வை மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் தாம் திக்குமுக்காடிவிட்டதாக கலைஞர்கள் தெரிவித்தார்கள். திரு. நித்தியானந்தவடிவேல் அமுதலட்சுமி தம்பதியர் கேரள உணவகத்தில் மிகப்பெரும் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்தனர். எஸ்.ஜெயாலசிங்கம், இகுரு.யோகராஜ் இருவரும் திரைப்படக் கலைஞர்களுக்கு சிறப்பு விருந்தை வழங்கினார்கள்.
தொண்டைமானாறு விவேகி விக்கினேஸ்வரன் தனது செலவிலேயே அனைத்துக் காரியங்களையும் முன்னெடுத்தார்.
கலிங்கராஜன் முழு நாளும் காலை முதல் இரவு வரை பாடுபட்டு நுழைவூச் சீட்டுக்களை விற்பனை செய்தார். விஸ்ணு செல்வம் அனைத்து உதவிகளையும் வழங்கி கேடயங்களை வாங்கி உதவினார்.
மருத்துநீர் புகழ் திரு. ராஜ்குமார் போக்குவரத்து ஏற்பாடுகளை வழங்கியதோடு விமானநிலையத்தில் வைத்து வழிப்பயணத்திற்கு வல்வைப் புகழ் கொழுக்கட்டைவழங்கி ஆனந்தத்தைத் தெரிவித்தார்.
ஒரு திரைப்படத்தால் உலக முற்றும் பரவியுள்ள வல்வை உறவுகளின் அன்பை பகிர்ந்துகொள்ள புதுவழிபிறக்கிறதே என்ற மகிழ்வை ஆசிரியர் கி.செல்லத்துரை வெளியிட்டார்.
கனடா வாழ் வல்வை மக்களின் அன்பு உயிர்வரை இனிக்கிறது என்று விமான நிலையத்தில் திரைப்படக் கலைஞர்கள் கூறியபடியே கண்களில் நீர் கசியவிடைபெற்றார்கள்.
திரைப்படத்தை தொடர்ந்து கனடாவில் தினசரி காட்சியாக காண்பிக்கும் பணிகளில் அடுத்த கட்டமாக கனடா வாழ் தமிழ் திரைப்படக் கலைஞர்கள் களமிறங்கியுள்ளார்கள் என திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.