புங்குடுதீவு மாணவி படுகொலை - வடமராட்சியிலும் இன்று முழு கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2015 (புதன்கிழமை)
புங்குடுதீவில் கடந்த புதன்கிழமை கடத்தி கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும், உரிய நீதி வேண்டியும் இன்று வடமராட்சியிலும் பூரண கடையடைப்பு இடம்பெற்றிருந்தது. இந்தக் கடையடைப்பிற்கு வடமராட்சி வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனால் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி இருப்பதை கீழே படத்தில் காணலாம். மேலும் பல பாடசாலைகளில் மாணவர்கள் அடையாள எதிர்ப்பிலும் ஈடுப்படிருன்தனர்.
குறித்த மாணவியின் படுகொலை தொடர்பில் பல கண்டன ஆர்பாட்டங்கள் மற்றும் கடையடைப்புக்கள் போன்றன வடக்கின் பல பகுதிகளிலும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.