2014 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.து.குமரேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமான அறிவிப்பினை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
வல்வையின் முதலாவது பிரதான அடையாளமாக விளங்கும் ச.வயித்தியலிங்கபிள்ளை புலவரால் இயற்றப்பட்டது சிந்தாமணி நிகண்டு ஆகும். இந்த நிகண்டு, மற்ற நிகண்டுகளைப் போலல்லாமல், செய்யுள் வரிசைப்படி, சந்தி பிரித்து சொல், பொருள் என பகுக்கப்பட்டு, கணினிமயமாக்க முறையில் www.viruba.com என்னும் இணையதளத்தில் தரவேற்றியுள்ளார் திரு.குமரேசன்.
தமிழக அரசு அறிவித்துள்ள 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுபவர்களின் விபரங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
திரு.குமரேசனின் கணனித் தமிழ் நிகண்டின் ஒரு பகுதி
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் புத்தாண்டு கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி. இத்தகைய பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக மரபுவழி பெருமை படைத்த சித்திரை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசால் அறிவிக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு முதல் அந்நாள் அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழுக்கு தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் தமிழ் வளர்க்கும் சிறந்த அமைப்பிற்கும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளும் தங்கப்பதக்கங்களும் வழங்குவதென அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
2014-ம் ஆண்டு விருதுகள் 2014-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.
2014-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கபிலர் விருது- அ.லலிதா சுந்தரம்.
உ.வே.சா. விருது- மருது அழகு ராஜ்
கம்பர் விருது- செ.வை.சண்முகம்
சொல்லின்செல்வர் விருது- டாக்டர் சுதா சேசையன்
ஜி.யு.போப் விருது- ஜெ. நாராயணசாமி
உமறுப்புலவர் விருது- சே.மு. முகம்மதலி
இத்துடன் 2013-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு ந.தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
கவிஞர் பிறைசூடனுக்கு விருது 2015-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் 2015-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2014-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: April 15, 2015 at 00:25
திரு குமரேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !வாழ்க நலமுடன் !!வாழ்க வளமுடன் !!!
K.Premkumar (uk)
Posted Date: April 14, 2015 at 19:42
Well done !!! You're Great !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.