வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ காத்தலிங்க ஆலயத்திற்கு புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் - எண்ணைக்காப்பு, கும்பாபிஷேகமும் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 10/09/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ காத்தலிங்க ஆலயத்திற்கு புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் - எண்ணைக்காப்பு, கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீ காத்தலிங்க சுவாமி ஆலயத்திற்காக புதிதாக சின்னான் காத்தான் புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் அமைக்கப்பட்டு, கடந்த 8ஆம் திகதி மாலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, புதிய பாய்மரக்கப்பல் ஊர்வலமாக மானாங்கானை ஸ்ரீ காத்தலிங்க ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த சின்னான் காத்தான் புரவி எனும் பாய்மரக்கப்பல் வல்வெட்டித்துறை மேத்திரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
மானாங்கானை ஸ்ரீ காத்தலிங்க ஆலயத்தின் எண்ணைக்காப்பு, கும்பாபிஷேகம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சின்னான் காத்தான் புரவி எனும் புதிய பாய்மரக்கப்பல் ஆகியவற்றின் படங்களை கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.