ரேவடி கடற்கரையில் கோலாகாலமாக நடைபெற்ற வினோத உடைப்போட்டி, 1000 இற்கும் அதிகமானோர் வருகை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/09/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியாளர்களை ஊக்குவிக்குமுகமாக பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் சிறுவர்களின் நடிப்பு மற்றும் கலை ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் முகமாக வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கான வினோத உடைப் போட்டியானது நேற்று மாலை சுமார் 05.00 மணியளவில் நடைபெற்றது.
இவ் வினோத உடைப் போட்டியானது வயது அடிப்படையில் கீழ் பிரிவு மற்றும் மேல் பிரிவு என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
இவ் வினோத உடைப் போட்டியில் ஸ்பைடர் மான், பலூன் வியாபாரி, கீரை வியாபாரி - 2 பேர், ஒளவைப்பாட்டி - 2 பேர், திருஞானசம்பந்தர் - 2 பேர், ஆசிரியர் - 2 பேர், திருவள்ளுவர், வைத்தியரும் பைத்தியங்களும், சண்டைக்காரார்கள், நத்தார் பாப்பா மற்றும் மீனவன் என 20 சிறார்கள் பங்குபற்றி பல்வேறு விதமான வேடங்களை ஏற்று நடித்திருந்திருந்தனர்.
போட்டி முடிவுகள்;
கீழ் பிரிவு
முதலாமிடம் :- திருஞானசம்பந்தர்
இரண்டாமிடம் :- ஆசிரியர்
மூன்றாமிடம் :- பலூன் வியாபாரி
மேல் பிரிவு
முதலாமிடம் :- ஒளவைப்பாட்டி
இரண்டாமிடம் :- திருவள்ளுவர்
மூன்றாமிடம் :- மீனவன்
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிக்க வருவோரை விட நேற்றைய வினோத உடைப் போட்டியைக் காண 1000 ற்கும் அதிகமானோர் வருகைதந்திருந்தனர். இவ்வாறு அதிகரித்துச்செல்லும் பார்வையாளர் கூட்டமானது வல்வை ரேவடிக் கடற்க்கரையினை ஒரு சிறந்த பொழுது போக்குத்தளமாக அடையாளப்படுத்துவதாகவே அமைகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.