மாலை 6.30 அளவில் மகோற்சவ குருக்களின் மனைவியாரால் ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆதீனகர்த்தாக்களின் இருப்பிடத்தில் இருந்து தாலித்தட்டு ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும்.
பின் அளவில் சிவபெருமான் தனது இருப்பிடத்தில் இருந்து புதுவஸ்திரம் தரித்து, சகல ரத்தினங்களாலும் செய்த நகைகள் அணிந்து பார்வதிதேவியின் இருப்பிடத்தை அடைய பார்வதிதேவியாரும் தற்போது நடைமுறையில் உள்ள முதற்தரமான பட்டுப்புடவை அணிந்து நவரத்தினத்தாலான நகைகள் அணிந்து காட்சி கொடுக்க இருவருக்கும் பூமாலை மூன்றுமுறை திருவிழா குருக்களால் மாற்றப்படும்.
பின்பு அம்பாள் தனது இருப்பிடம் செல்ல சிவபெருமான் ஆலய வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொர்க்கலோகம் போல அங்கீகரிக்கபட்ட திருமணமண்டபத்தை அடைந்து விசேட மணவறையில் அமர்ந்து விநாயகபூஜை, ரட்சாபந்தனம், அக்கினி காரியம் நடைபெற பார்வதிதேவியாரும் விசேட மணவறையை வந்து சேர்வார்கள்.
ஆலயத்துக்கு வரும் அடியார்களும் தமது விலையுயர்ந்த நகைகளையும், புதிய பட்டுக்களையும் உடுத்தி வந்து அமைதியாக வந்து சேர்வர். அப்போது விசேட தவில், நாதஸ்வர கச்சேரியும், கல்யாண மண்டபம் விசேட மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டும் இருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.