முடிவுகள் ஏதுமின்றி வல்வை அம்மன் தேவஸ்தான மகாசபை கூட்டம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் நேற்று காலை கோயில் முன்றலில் இடம்பெற்றது. கடந்த மாதம் புத்தி நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற இந்த முதலாவது கூட்டம், நிலுவையில் உள்ள கல்யாண மண்டபத்தின் கடன் உட்பட்ட வேறு சில விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்துக்களில் உடன்பாடு எட்டப்படாமல் முடிவுகள் ஏதுமின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வழமையாக கோயிலின் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்பாக வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள் தொடர்பாக முடிவுகள் எடுப்பதற்காக கூட்டம் ஒன்று கூட்டப்படுவது வழமையாகும்.
வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இன்னும் 2 வாரங்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேவஸ்தான மகாசபை மட்டத்தில், நேற்றைய கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயங்கள் தீர்ப்பதில் சிரமங்கள் உள்ளதால், தேவஸ்தான மகாசபையினர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை நாடலாம் என எதிர்க்கப்பர்க்கப்படுகினர்த்து. ஆனாலும் இது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 10, 2017 at 22:50
திருவிழா காலத்தில் மட்டுமென்றாலும் அருச்சனைக்கு பருசீட்டு கொடுத்தால் அதில் வரும் வருமானத்தை வைத்து சில கடன்களை அடிக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.