புனரமைக்கப்பட்ட தீருவில் மைதானத்தில் 2 வருடங்களுக்கு பின்னர் உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம் பல லட்சம் ரூபா செலவில் திருத்தி புனரமைக்கப்பட்ட தன் பின்பு நேற்று 2 வருடங்களின் பின்னர் உதைப்பந்து போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
மேற்படி போட்டிகள் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் வல்வை விளையாட்டுகழகத்திற்கு உட்பட கழங்களுகிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியாக அமைந்ததுள்ளது.
நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனீங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் நேதாஜி விளையாட்டுக்கழகம் 3 : ௦ என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவதாக வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்திற்கும் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கும் நடைபெறவிருந்த போட்டியானது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் சமுகமளிக்காத காரணத்தினால் தீருவில் விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.