கொழும்பில் பறந்த வல்வெட்டித்துறைப் பட்டங்கள் - நிகழ்வைச் சிறப்பித்திருந்த கொழும்பு வாழ் வல்வை மக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2017 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் நேற்று மாலை தலைநகர் கொழும்பின் மக்கள் கூடும் பிரதான இடமான காலி முகத்திடலில் பறக்க விடப்படிருந்தன. பிற்பகல் சுமார் 0230 மணியிலிருந்து மாலை 6 மணிவரை, சிறியதும் பெரியதுமான வெவ்வேறு வடிவங்கள் கொண்ட 20 பட்டங்கள் வானில் விடப்பட்டிருந்தன.
எமது இணையதளமான வல்வெட்டித்துறை.ORG குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதில் கொழும்பு வாழ் வல்வை மக்களின் பங்கு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது. 6 பட்டக் கலைஞர்கள், எமது இனையதள உறுப்பினர்கள் சிலர் என மிகக் குறைந்த மனித வலுவிற்கு வலுச் சேர்த்தவர்கள் கொழும்பு வாழ் வல்வை மக்களே ஆவார்கள். இவர்களுடன் வேறும் சில தமிழ் மக்களும் புரிந்திருந்தனர்.
ஆரம்பம் முதல் முடிவு வரை நிகழ்விற்கு வலுச் சேர்த்தவர்கள்கொழும்பு வாழ் வல்வை மக்கள், தலை நகர் கொழும்பில் அதிகளவில் பங்கு கொண்ட பிரதானமான பொது நிகழ்வு இது என்றால் மிகையாகாது.
நிகழ்வைச் சிறப்பிப்பதில் பலர் பங்குகொண்ட போதும் குறித்த நிகழ்வில் பல கொழும்பு வாழ் வல்வை மக்களை ஒன்றிணைப்பதில் சிரேஸ்ட பொறியியலாளர்திரு.ஜோகசபாபதிப்பிள்ளை அவர்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக அமைந்திருந்தது.
கீழே படங்களில் நிகழ்வைச் சிறப்பிப்பதில் பங்குகொண்டவர்களின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
யோகசபாபதிப்பிள்ளை (Sri Lanka)
Posted Date: February 19, 2017 at 08:16
இணையத்தள அன்பர்களுக்கு நன்றி! பட்டம் விடும் செய்தி அறிந்ததும் அடியேன் செய்ததெல்லாம் சில தொலை பேசி அழைப்புக்கள் மாத்திரமே. இதுவே சிறப்பென்றால், தலை நகருக்கு இப்பட்டங்களைக் கொண்டுவந்து, முன்னெச்சரிக்கையுடன் உரிய அதிகாரிகளுக்கு முறையாக அறிவித்து சகல ஏற்பாடுகளுடனும் எமது பட்டங்களை வானில் பறக்கவிட்டு அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த ORG இணையத்தினரும் எமது பட்டங்களின் அமைப்பாளர்களும் எத்துணை பாராட்டப்பட வேண்டியவர்கள்! அங்கு வந்திருந்த Denmark நாட்டவர் ஒருவர் ஆர்வமாக பட்டங்களையும் அதன் அமைப்பாளர்களையும் நிழற்படம் பிடித்தவேளை, இப்பட்டங்களை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்துள்ளதையும் எமது தைப்பொங்கல் பட்டப்போட்டியைப் பற்றியும் 40 அடி ஓணான் பட்டம் பறந்ததையும் நாம் கூறியவேளை அவர் வியந்து கூவிய விதம்... வாழ்க வல்வை!
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: February 14, 2017 at 14:57
எமது பாரம்பரியமான நவீனமான பட்டங்களை தலைநகர் கொழும்பு எடுத்துச் சென்றதற்கு வல்வெட்டித்துறை.Org நண்பர்களுக்கு எமது பாராட்டுக்கள். எமது மூதாதையர்கள் பாய்கப்பல் தொழில்புரிந்தபோது அரக்கன், பர்மா. இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தருவித்த திறமான தோல் மூங்கிலில் பட்டம் கட்டுவார்கள்.தொழில் அற்றபின்பு வீடுகளின் கூரைகளில், தட்டிகளில் உள்ள மூங்கிலை எடுத்து கட்டினார்கள். அதில் விண்பூட்டி (பனைமட்டை யில் சீவப்பட்ட) இராக்கொடியாக இருக்கும். பின்நாட்களில் பல்ப் கட்டி கயிற்றுடன் மின்சாரவயர்களுடன் ஏற்றி விடுவார்கள். ஆகாயத்தில் செயற்கை நட்சத்திரங்களாக இரவு முழுவதும் ஆடி அசைந்து கொண்டி ருக்கும்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.