வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா சற்றுமுன்னர் நிறைவெய்தியது.
வைரவப் பெருமான் தீர்த்தம் ஆடுவதற்காக இன்று காலை சுமார் 0530 மணியளவில் தமது ஆலயத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 6 மணியளவில் ஊரணி தீர்த்தக் கரையடைந்தார்.
தீர்த்தோற்சவம் நிறைவெய்திய பின்னர் வைரவப் பெருமான் மீண்டும் தம் ஆலயம் நோக்கி புறப்பட்டு, வல்வை அம்மன் சிவன் கோயில்களை வலம் வந்து 1130 மணியளவில் மீண்டும் தமது ஆலயம் வந்தடைந்தார்.
வல்வை ஆதிவைரவர் கோயிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்களாக இடம்பெற்றுவந்தது.
கீழே காட்சிகளில் வைரவப் பெருமான் தீர்த்தம் ஆடிய பின்னர் தமது ஆலயம் நோக்கி வருவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.