கொடியிறக்கத்துடன் வல்வை வாலாம்பிகை வருடாந்த உற்சவம் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2017 (புதன்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் இன்று கொடி இறக்கத்துடன் நிறைவெய்தியது.
இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் தீர்த்த நிகழ்வுகளிற்காக 0800 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரை நோக்கி புறப்பட்டார். ஊரணி தீர்த்தக் கடற்கரயில் சுமார் 9 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றததைத் தொடர்ந்து அம்பாள் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்து இன்று மாலை தமது ஆலயம் நோக்கி புறபட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பூசைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதிஉலா இரவு 1100 மணியவில் இடம்பெற்று கொடி இரவு 11 32 மணிக்கு இறக்கப்பட்டது.
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வரன் கோவிலின் வாலாம்பிகாதேவி வருடாந்த மகோற்சவம் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்று வந்தது.
கீழே காட்சிகளில் அம்பாள் தமது ஆலயம் நோக்கி வருவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.