கராத்தேயில் தொடர்ந்து பதக்கங்கள் பெற்று வல்வைக்குப்பெருமை சேர்க்கும் அகிலன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வன்.அகிலன் கருணாகரன் கடந்த 18.06.2016 அன்று அயர்லாந்தில் நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் (Kumite at Karate World Championship) பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கி சாதனை படைத்துள்ளார்.
லண்டனில் வசித்துவரும் செல்வன்.அகிலன் ஆசான் கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் British Academy of Shotokan Karate (BASK) கராத்தே பயின்று வருகின்றார்.
அகிலன் அயர்லாந்தின் டப்ளின் நகரில் கடந்த 15ம் திகதி முதல் 19ம் திகதி வரை நடந்த கராத்தே 6 ஆவது உலக சாம்பியன்ஷிப்பில் (6th WUKF World Championship) பங்கேற்றார்.
இப்போட்டியில் 36 நாடுகளில் இருந்து வந்த 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். கராத்தேயின் Kumite க்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரிவில் போட்டியிட்டு முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
மேலும் 2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். அத்துடன் 2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கலபதக்கங்களை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அகிலன் வல்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதா கருணாகரனின் புதல்வன் என்பதும் முன்னாள் வல்வை ப்ளுஸ் விளையாட்டுவீரர் கதிர்காமலிங்கத்தின் பேரனும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Kuganathan sadadsarasundaram (Uk)
Posted Date: June 28, 2016 at 18:59
Little boy got very big achievement.congratulation
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.