வல்வையைச் சேர்ந்த தம்பதியினர் திருச்சியில் சிறந்த உழைப்பிற்காக AIR இனால் பாராட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2015 (புதன்கிழமை)
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டு, தற்பொழுது தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தின் சாந்தனுரில் வாழ்ந்துவரும் ராஜமோகன், விசாகா ரஜினி தம்பதியினர் திருச்சி அகில இந்திய வானொலியின் படைப்பாக வெளிவரும் "வானொலி உழவர் சங்க செய்திக்கதிர்" இனால் சிறந்த உழைப்பிற்காக பாராட்டப்பட்டுள்ளனர்.
சிறந்த மாடு வளர்ப்பு மற்றும், ஜேர்மன் செர்பேர்ட் (German Shepherd) வகை நாய்களின் இனப்பெருக்கத்திற்காகவே இவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர்.
திருச்சி அகில இந்திய வானொலியின் "வானொலி உழவர் சங்க செய்திக்கதிர்" ஊடகப் பிரிவினரால் இவர்கள் நேரடியாகப் பேட்டிகாணப்பட்டு, குறித்த பெட்டியின் விவரம் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
வானொலி உழவர் சங்க செய்திக்கதிர் வெளியிட்டுள்ள விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Periyathamby (Canada)
Posted Date: April 16, 2015 at 00:38
படிக்கும்போது மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கின்றது! இவர்களை போன்றவர்கள் எமது தலைமுறை பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டிகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.