வல்வையை பூர்வீகமாகக் கொண்ட சகோதரியும் சகோதரனும் போலந்தில் நடைபெற்ற உலக கிண்ண கராத்தேயில் பதக்கங்கள் பெற்றனர் (2 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2014 (திங்கட்கிழமை)
லண்டனில் வாழும் வல்வெட்டிதுறையை பூர்வீகமாகக் கொண்ட சகோதரியும் சகோதரனும் போலந்தில் நடைபெற்ற உலக கிண்ண கராத்தே போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செல்வி ஆர்த்தி கருணாகரன் (வயது 14) மற்றும் செல்வன். அகிலன் கருணாகரன் (வயது 7) ஆகிய இருவருமே கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரை போலந்தில் இடம்பெற்ற போட்டியில் (Kumite at the world champianship for Children, Cadets & Juniors) குறித்த பதக்கங்களை பெற்றுள்ளனர். குறித்த இப்போட்டிகளில் 36 நாடுகளைச் சேர்ந்த 1750 போட்டியாளர்கள் பங்கு எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் சென்ஷி (Sensi) கணேசலிங்கத்தின் மாணவர்கள் ஆவார்கள். மேலும் திரு.கணேசலிங்கத்தின் மாணவர்களில் ஆர்த்தி தான் முதல் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர்.
தற்பொழுது லண்டன் 'Ricards Lodge High School' இல்தரம் 10 இல் கல்வி கற்றுவரும் ஆர்த்தி கடந்த வருடமே கராத்தே கற்க ஆரம்பித்து உள்ளுரில் நடைபெற்ற பல போட்டிகளில் பல வெற்றிகளை பெற்றுளார். சிறு வயதிலிருந்தே உதைபந்து உட்பட்ட பல விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் கணிதத்துறை சம்பந்தமான ஒரு துறையில் தன்னை ஈடுபடுத்துவதுடன், கராத்தேயில் ஒரு பயிற்றுனராக வருவதை தனது இலக்காகக் கொண்டுள்ளாதாகக் கூறும் இவர், தனது வெற்றிக்கு தனது ஆசான் சென்ஷி (Sensi) கணேசலிங்கமும் தனது பெற்றோருமே வழி நடாத்துவதாக கூறுகின்றார்.
7 வயதான ஆர்த்தியின் தம்பி அகிலன் கடந்த வருடம் தனது 6 ஆவது வயதில் கராத்தேயைக் கற்க ஆரம்பித்து, கடந்த வருடம் மார்ச் மாதம் தனது முதலாவது போட்டியான 'Bask tournament' இல் பங்கேற்று, அதன் பின்னர் பல உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளைப்பெற்றுள்ளார்.
மேலும் 'European karate championship' இல் பங்கு கொண்டதுடன் இந்த வருடம் போலந்தில் இடம்பெற்ற போட்டியில் (Kumite at the world champianship for Children, Cadets & Juniors) வெள்ளிப் பதக்கங்கத்தை பெற்றுள்ளார்.
திரு.கருணாகரன் (செல்வன்), திருமதி.கவிதா ஆகியோரின் பிள்ளைகளான இவர்கள், செந்திவேல் தேசிகர், நாதநாயகி மற்றும் கதிர்காமலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் பேரன்கள் ஆவார். திரு.கதிர்காமலிங்கம் வல்வையின் முன்னாள் சிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
saa.pe.rajkumar (CANADA)
Posted Date: November 04, 2014 at 01:24
vazhththukkal vazhvalamudan
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.