நவரத்னம் 34 வருட தேர்தல் திணைக்கள சேவையை முன்னிட்டு கொழும்பில் கெளரவிக்கப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 30/09/2015 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.என்.பி.நவரத்னம் அவர்கள் கடந்த 34 வருடங்களாக இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் ஆற்றிய சேவையை முன்னிட்டு இன்று கொழும்பில் கெளரவிக்கப்பட்டார். தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 60 வருடம் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த கெளரவிப்பு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு சற்று முன்னர் பிற்பகல் 2 மணிவரை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபதில் (Bandaranaike Memorial International Conference Hall- BMICH) நடைபெற்றது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் திணைக்களத்தின் சேவையாளர்கள கெளரவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க் கட்சி தலைவர் சம்பந்தன் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முன்னை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திரு.என்.பி.நவரத்னம் அவர்களுடன் மேலும் 70 சேவையாளர்கள் இன்றைய நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.