வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான கடற்கரை உதைபந்தாட்டப் போட்டி 3 ஆம் நாள் போட்டிகள் இன்று இடம்பெற்றன..
வல்வை விளையாட்டுக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையேலேயே 5 நபர் கொண்ட இந்தப்போட்டியில் அனுமதிக்கப்பட்ட கழங்கங்கள் 4 குழுக்காளாக பிரிக்கப்பட்டு, தகுதி பெற்ற 8 அணிகளுக்கான காலிறுதிபோட்டிகள் இன்று இடம்பெற்றன.
போட்டியில் முதல் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 15,000/- ரூபாவும்,இரண்டாம் இடத்தைப் பெறும் கழகத்திற்கு 10,000/- ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இன்றைய காலிறுதி போட்டிகளின் முடிவில் அறையிருதி ஆட்டத்திற்கு ரேவடி B விளையாட்டுக்கழகம், இளங்கதிர் B விளையாட்டுக்கழகம், உதயசூரியன் A விளையாட்டுக்கழகம், நேதாஜி விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு கழகங்கள் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
நாளைக்கு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் மற்றும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது
குறித்த போட்டி அமரர்கள் பரஞ்சோதி மற்றும் சந்திர மோகன் ஞாபகார்த்தமாக நடாத்தப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.