வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் அண்மையில், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இலவச ஸ்கேன் சேவையைத் தொடர பொது மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர்.
இதற்கமைய பல நலன் விரும்பிகள் நிதியுதவிகள் அளித்துள்ளனர். இவர்களுக்கு நன்றி கூறும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர், இனிமேல் தமது நோயாளர் நலன்புரிச் சங்க கணக்கில் ஸ்கேன் சேவைக்காக பணத்தை வைப்பிலிடுபவர்கள், பணத்தை வைப்பில் இட்ட பின்னர் தமது கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை - 00 94 21 226 3530
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.