வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் பெருவிழாவான இந்திரவிழா நேற்று மாலை முதல் இன்று அதிகாலை இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் ஊரணி முதல் ஊரிக்காடு வரையான பிரதான வீதி பல்வேறு சோடனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்ட இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கீழே படங்களில் வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைக்கப்படிருந்த அலங்காரங்களையும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினரையும் காணலாம்.
வல்வைச் சந்தியில் அன்னபூரணிக் கப்பலின் மாதிரி வடிவம் மற்றும் அதன் விபரங்கள், நாகர்கோயிலில் உள்ள வல்வை நாயகியின் பாய்மரக் கப்பலின் வடிவம் மற்றும் விநாயகப் பெருமான் கட் அவுட் என்பன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.