Ceylon Today உட்பட்ட ஊடகங்களில் கொழும்பில் பறந்த வல்வெட்டித்துறை பட்டங்கள் பற்றிய செய்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2017 (வியாழக்கிழமை)
கடந்த 12 ஆம் திகதி தலைநகர் கொழும்பில் பொது மக்கள் கூடும் மையப் பகுதியான காலி முகத்திடலில் பறந்திருந்த வல்வெட்டித்துறை பட்டங்கள் பற்றிய செய்தி ஆங்கில ஊடகமான 'Ceylon today' உட்பட்ட சில ஊடகங்களில் தற்பொழுது இடம்பிடித்துள்ளது. 'Ceylon today' யின் 14 ஆம் திகதி பதிப்பில் 'VVT Kites over Galle face green' என்னும் தலைப்பில் 'மண் கிண்டும் இயந்திரத்தின்' படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி பல தமிழ் இணையதளங்களிலும் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கன்னிமுயற்சி ஆகையால் சிலவேறு காரணங்களை முன்னிட்டு எம்மால் (எமது இணையதளம் தவிர) வேறு எந்த ஊடகங்களிலும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ceylon today இல் வந்த செய்தியின் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
"The kites makers from Valvettithurai (VVT) had flown twenty kites in various designs at the Galle face Green in Colombo on Sunday (12). The Kites which were put on display at the annual kites’ competition on the VVT beach on the Thaipongal day 14, January, were brought to Colombo and flown in the back drop of the high rise building, around the Galle face green, 0230 PM to 0600 PM to the delight of the locals as well as forefingers".
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.