நெடியகாடு பிள்ளையார் கோயில் சப்பறத் திருவிழா நிறைவு (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/09/2016 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு நிறைவுற்றது. சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை நிகழ்வுகள் நடைபெற்றதை தொடர்ந்து மாலை 0700 மணியளவில் வதந்த மண்டபப் பூசைகளைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் அவர் தம் பரிவார மூர்த்தங்கள் சகிதம் சப்பறத்தில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சப்பறம் வெளிவீதியுலா இடம்பெற்று திருவிழா சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது. சப்பறம் மற்றும் ஆலய வளாகங்கள் நேற்றைய திருவிழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், சப்பறத் திருவிழாவிற்கு ஏராளமான அடியார்கள் பங்கெடுத்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.