வட அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகி வட மேற்குத் திசையில் நகர்ந்த தாழமுக்கம், இன்னும் சில மணி நேரங்களில் அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடக்கவுள்ளது.
அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடந்து மேற்கு வடமேற்குத் திசையாக நகரவுள்ள தாழமுக்கம், படிப்படியாக மிகவும் குறைந்த தாழமுக்கமாகவும் (deep depression) பின்னர் புயலாகவும் (cyclonic storm) மாறவுள்ளது.
மேற்கு வடமேற்குத் திசையாக நகரவுள்ள இப்புயல் பின்னர் வடமேற்குத் திசையாக நகர்ந்து இந்தியாவின் ஆந்திரா - ஒரிசா பகுதிகளை இன்னும் 72 மணி நேரங்களில் கடக்கும் எனவும் எதிர்பார்ர்க்கபடுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.