வங்கக் கடல் புயலுக்கு பைலின் (Phailin) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது, இலங்கையின் சில பகுதிகளிலும் சீரற்ற காலநிலை உருவாகலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2013 (வியாழக்கிழமை)
வட அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவாகி வட மேற்குத் திசையில் நகர்ந்த தாழமுக்கம், அந்தமான்– நிக்கோபர் தீவுகளைக் கடந்து தற்பொழுது புயலாக மாறி (cyclonic storm) வங்காள விரிகுடாவில் வடமேற்குத் திசையாக தற்பொழுது நகர்ந்துகொண்டுள்ளது. இப்புயலுக்கு பைலின் (Phailin) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது
இன்னும் சில மணி நேரங்களில் இப்புயல் மேலும் வலுப்பெற்று கடும் புயல், மற்றும் மிகக் கடும் புயலாக மாறி (Severe cyclonic storm to Very severe cyclonic) வடமேற்குத் திசையாக தொடந்து நகர்ந்து இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் வட பகுதியை நாளை மறுதினம் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புயல் பஹைலினால் இலங்கைத் தீவிற்கு நேரடிப் பாத்திப்புக்கள் ஏற்படாது விட்டாலும், இலங்கையின் பல பகுதிகளில் அசாதாராண காலநிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட்ட பல பகுதிகளில் அவ்வப்போது தற்பொழுது மழை பெய்து வருவதும் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புயலின் செய்மதிப்படம்
புயலின் எதிபார்க்கப்படும் பாதை
மேற்குறிப்பிட்ட புயல் சம்பந்தப்பட்ட செய்தி இந்தியா உட்பட்ட உலகின் சிறந்த வானிலை அவதான நிலையங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எம்மால் (Valvettithurai.org) தொகுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.