தொண்டைமானாறு வல்லை வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவுமின்றி காணப்படும் இவ்வீதியைக் கடந்து மழைக்காலத்தில் வெள்ளம் முழுமையாக மூடி அவ்வீதியின் மேலால் ஓடியமையால் வீதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுதும் தொண்டைமானாறு நன்னீர் தேக்கத்திற்கு அருகில் நீர் வீதியின் மேலாக ஓடுகின்றது. அதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கு வருகின்றனர்.
மேலும் இலங்கை போக்குவரத்துசபையின் 751, 766,767 ஆகிய வழி இலக்க பயணிகள் பேருந்துகளும் ஆபத்தான நிலையில் அவ்வீதியூடான பயணத்தினை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.