புலம் பெயர்ந்தாலும் வல்வெட்டித்துறையில் நினைவுகளை உணர்வுகளாகக் கொண்டு வாழும் வல்வை மனங்களின் புண்பட்ட இதயங்கட்கு அருமருந்தாக விளங்கிக் கொண்டிருக்கும் Valvettithurai.org இணையத்தளமே! முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நீகால் பதித்திருக்கும் துறைகளுடன், இன்னும் பல புதிய துறைகளில் தடம் பதித்து,சீருடன் வளர்ந்து,சிறப்பாக வாழ, புலம்பெயர்ந்த வல்வை உறவுகளுடன் சேர்ந்து நானும் உன்னை வாழ்த்துகின்றேன்.
தன்னலமற்ற,பொதுநலமே குறிக்கோளாகக் கொண்டு, தம்மை விளம்பரப்படுத்தாது தாம் ஈடுபாடு கொண்ட பணியைச் சிறப்புடன் ஆற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர் குழாம்,ஒளிப்படக் கலைஞர்கள் அனைவர்க்கும் எமது நன்றிகள்.
புலம் பெயர் வல்வையர்கள் ஊரில் நடக்கும் தமது உறவுகள், நண்பர்களின் மரணச் செய்திகளை உடனுக்குடன் அறியவிரும்புவர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற 'சமூக அறிவித்தல்கள்' என்ற பெயரில் வல்வை உறவுகளின் மரணச் செய்திகளை உடனுக்குடன் தந்தால் என் போன்ற வல்வை உறவுகளின் மனங்கள் ஆறுதல் அடையும்.
'வல்வையில் சிறந்ததோர் எழுத்துப் பரம்பரையை உருவாக்குவோம்'என்ற குறிக்கோளுடன் 1971 இல் வல்வையில் தொடங்கப்பெற்ற 'அலைஒளி', 1975 இல் வெளிவந்த 'அருவி' பின்னாட்களில் வெளிவந்த 'கவிஞன்' போன்ற வல்வை இலக்கியத்துறையில் தடம் பதித்தகையெழுத்துச் சஞ்சிகைகள், இலைமறைகாயாக இருந்த வல்வை எழுத்தளர்களை வெளிக்கொணர்ந்ததுடன், புதியஎழுத்தாளர்களை உருவாக்கியும் ஓவியத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களை ஊக்குவித்தும் செய்த பணியை நீங்களும் தொடர்ந்தால் வல்வையின் இலக்கிய உலகு இன்னும் புத்துணர்ச்சி பெறும் என எதிர்பார்க்கின்றேன்.
மீண்டும் உங்களின் பணி வளர்ந்து, உங்கள் இணையத்தளம் மிக நீண்ட காலம் வல்வைக்கும் மற்றையோருக்கும் பயன்படவேண்டும் என்று வல்வை முத்துமாரியம்மனை வேண்டி விடைபெறுகின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.