இன்று தொட்டு என்றும் எம் மனங்களிலும் இணையத்திலும் முதல்வனாய் நீ வாழ்க - வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றம் - (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)
(Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
நீடுழி வாழ்க
மக்கள் மனம் நிறைத்து வாழ்வில் ஒளி படைத்து மனம் திறந்து உண்மை உரைத்து எண்கள் உறவுகளோடு உறவை வாழும் உன் வருகை எமக்கெல்லாம் கிடைத்த பெரும் வரப்பிரசாதம்.
கல்வி கலை கலாசார பாரம் பாரிய விடயங்களை எம் விருப்பத்துக்கிணங்க தொகுத்து தருகிறாய். பாரபட்சம் இன்றி நடு நிலமையோடும் நேர்மையோடும் உன் பணியை சிறப்புடன் செய்து எங்கள் மனங்களில் தீராத இடத்தை பிடித்துள்ளாய்.
தொடர்ந்து நீ உன் பணியில் இன்று தொட்டு அன்று வரை எம்மவர் வரலாறு முதல் அவர்கள் வாழ்க்கை வட்டங்களை உன் இணையத்தில் இணைப்பியதை விட, வல்வையின் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கிடையில் நின் Valvettithurai.org இணையதளத்தின் ஊடக போட்டிகளை வைத்து எம்மவர்களை உயர்த்தும் பொறுப்பு உனக்கு உண்டு.
மேலும் கல்வியிலும் கலையிலும் தேசிய மட்ட ரீதியாக வெற்றி பெற்றவர்களைப் பேட்டி கண்டு அவர்கள் முகங்களை உன் தளத்தில் தவழவிடுவாயாக.
இன்னும் நாம் சொல்ல முடியாத அளவுக்கு உன் பணி சிறப்பாக உள்ளது. இன்று தொட்டு என்றும் எம் மனங்களிலும் இணையத்திலும் முதல்வனாய் நீ வாழ்க வாழ்க வாழியவே.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.