தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு, வல்வையைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013 (வெள்ளிக்கிழமை)
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்
"தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வல்வெட்டித்துறைப் பிரதேசதேசத்தைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தின் பிரதான அகதிமுகாமான இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில், தற்பொழுது வல்வையைச் சேர்ந்த சுமார் 15 குடும்பங்கள் வரையே வாழ்ந்து வருகின்றனர்.
படம் - இராமேஸ்வரம் 'மண்டபம்' அகதிகள் முகாம் வாசல், Photo by Valvettithurai.org
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.