வல்வை ஒன்றியம் மறுமலர்ச்சி பெற்றிருப்பது இன்னொரு நம்பிக்கை தருகிறது - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2019 (திங்கட்கிழமை)
வல்வை ஒன்றியம் மறுபடியும் புனரமைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வாகியிருப்பதை அறிந்து மறுபடியும் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியது.
வல்வை ஒன்றியம் என்பது ஏன் அவசியம் என்பதற்கு எனது எண்ணங்களும் அனுபவங்களும் தரும் விளக்கம் இதுதான்.
தாயகத்தில் வல்வை ஒன்றியம் உறுதியான ஒரு தாபனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டால் மட்டுமே வெளிநாடுகளில் புதிய நம்பிக்கையை நம்மால் விதைக்க முடியும்.
பிளவுபடாத ஒரு கட்டமைவு வல்வையில் இருக்குமாக இருந்தால் வல்வைக்கான உதவிகளை பெறுவதற்கு நாம் மக்களை துணிந்து அணுகலாம்.
வல்வையில் நடக்கும் பணிகளை சரியாக கண்காணிக்க பொறுப்பு வாய்ந்த ஓர் அமைப்பு இருந்தால் நாம் முதல் வெற்றியை பெற்றுவிடலாம்.
வல்வை ஒன்றியம் சரியாக செயற்படாமையால் டென்மார்க்கில் இருந்து வருடம் தோறும் பணம் அனுப்புவதும் நின்று போனது.
மேலும் உலகளாவிய வல்வை மக்களை ஒன்றுபடுத்தி ஒரு மாபெரும் சக்தியாக மாற்றாவிட்டால் நாம் அடுத்து வரும் உலக பொருளாதார மேம்பாட்டிலும் வடமாகாண அரசியலிலும் எதிர்காலத்தில் நின்று பிடிக்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் ஒரு மந்திரி பதவிகூட நமது ஊருக்கு கிடைக்கவில்லை காரணம் நாம் பலமாக இல்லை.
சிகரங்களை தொடலாம், காலம் இன்னமும் கைவிட்டு போய்விடவில்லை.. எல்லாவற்றுக்குமே..
தாயகத்தில் ஊழல் இல்லாத ஒரு தூய அமைப்பு மிக அவசியம், ஏனென்றால் மேலை நாடுகளில் புதிதாக வந்துள்ள வல்வையின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையை இணைக்க வேண்டுமானால் அது நமக்கு அவசியம்.
சிறிய ஊழல் இருந்தாலும் அவர்கள் ஒரே நொடியில் தூக்கி வீசிவிடுவார்கள். புதிய தலைமுறை தனிநபர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது பொறுப்புள்ள நிர்வாகம் இருக்கிறது, அது ஜனநாயக கட்டமைவுப்படி இயங்குகிறது என்ற உறுதிப்பாடுதான் அவர்களை உள்ளே கொண்டுவரும்.
முன்னர் வல்வையில் வாழ்ந்த அனுபவமுடையோரை வைத்து உருவாகிய வல்வை நலன்புரி சங்கங்களின் காலம் முடிந்து, புதிய தலைமுறையின் காலம் ���லர்ந்துள்ளதால் நாமும் பல மாற்றங்களை செய்தாக வேண்டியுள்ளது.
முதலாவதாக உலக நகரங்களை ஒவ்வொரு இனமும் எப்படி உருவாக்குகிறது என்பதை அறிந்து நகரசபையை சரியாக பயன்படுத்தி சக்தி மிக்க தாபனமாக்க வல்வை ஒன்றியம் பாடுபட வேண்டும்.
இன்றைய வல்வை வெளிநாடுகளில் சர்வதேச மயப்பட்டிருக்கிறது. அதற்கு அமைவாக நாமும் செயற்பட வேண்டும். புதிய வல்வை ஒன்றிய நிர்வாகத்தை பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை பிறக்கிறது.
இப்போது வெளி நாடுகளில் இருந்து சிலர் வல்வையில் வந்து நிற்கிறார்கள், அவர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டு நிலவரங்களை கேட்டறிந்து உரையாடல்களை வளர்க்க வேண்டும்.
முன்னர் நாம் வல்வை ஒன்றியத்தை உருவாக்கியபோது ஏற்பட்ட குறைபாடுகள் பல இன்றும் திருத்தப்படாமலே நிலவுகிறது. அவற்றை சீர் செய்ய வேண்டும்.
புதிய நிர்வாகம் வெற்றிகரமாக முதலாவது காலடியை பதிக்க வாழ்துகிறேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.