வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கீழ்க்குறிப்பிட்டுள்ள செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் துணை விதிகளுக்கமைய ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி அனுமதிகளைபெற்றுக்கொள்வதன் மூலம் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு இத்தால் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்
1.அனுமதியற்ற சகல நடமாடும் வியாபார நடவடிக்கைகளும் 01.06.2019 முதல் இப்பிரதேசத்தில் தடை செய்யப்படுகின்றது. நகரசபையில் உரிய அனுமதியினைப் பெற்றுக்கொள்வோர் தவிர்ந்த ஏனையோர் சட்டநடவடிக்கைக்கு ஆளாகநேரிடும்.
2.சகல நடைபாதை வியாபார நடவடிக்கைகளும் 01.06.2019 முதல் இப்பிரதேசத்தில் தடைசெய்யப்படுகின்றது. நகரசபையில் அனுமதியினைப் பெற்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் நடைபாதை வியாபாரங்களை மேற்கொள்ள முடியும். தவறுவோர் சட்டநடவடிக்கைக்கு ஆளாகநேரிடும்.
3.இப்பிரதேசத்தில் இயங்கும் சகல தனியார் கல்வி நிறுவனங்களும் 15.06.2019இற்கு முன்னதாக தமது விபரங்களை பதிவு செய்து வியாபார அனுமதியினையினை பெற்றுக்கொள்ளவும் அனுமதியற்ற தனியார் கல்வி நிறுவனங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
4.நகரசபையின் அனுமதியினை பெற்றுக்கொள்ளாது கட்டடங்களை அமைத்தவர்கள் அல்லது அமைப்பவர்கள் 30.06.2019இற்கு முன்னதாக உரிய ஆவணங்களை சமர்பித்து கட்டட அனுமதியினைப் பெற்றுக்கொள்ளவும் தவறுவோர் சட்டநடவடிக்கைக்கு ஆளாகநேரிடும்.
5.சகல வரியிறுப்பாளர்களும் 30.06.2019இற்கு முன்னதாக தமது ஆதனவரிகளை நிலுவையின்றிச் செலுத்தி சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். ஆதன வ நிலுவையுள்ளோரின் பெயர் விபரங்கள் பொது இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு ஆதன உரிமையாளரின் அல்லது பராமரிப்பாளரின் அல்லது அதில் வசிப்பவர்களின் சொத்துக்களை நடக்கட்டல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.